கார்காத்த வேளாளர் கோத்திரங்களின் விளக்கவுரை

கார்காத்த வேளாளர் கோத்திரங்கள் சிலவற்றிற்கு இதில் விளக்கவுரை எழுதியுள்ளேன்

இப்படிக்கு, 

புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை

விளக்கவுரை எழுதும் பணி இப்பொழுது தான் தொடங்கப்பட்டுள்ளது

  1. அன்னலுடையான்
  2. அஞ்சலுடையான்
  3. அங்கலுடையான்
  4. அங்கத்துடையான்
  5. அங்கனுடையான்
  6. அரியனிடையான்
  7. அச்சுதராயன்
  8. ஆவுடையான்
  9. ஆளுங்குடையான்
  10. ஆலச்சுக்குடையான்
  11. காளப்பாளன்
  12. களத்துடையான்
  13. கடம்புடையான்
  14. கருப்புடையான்
  15. கருவாளுடையான்
  16. காருடையான்
  17. காவலுடையான்
  18. காலிங்கராயன்
  19. காங்கயராயன்
  20. குன்றலுடையான்
  21. குளத்துடையான்
  22. குமாரக்குடையான்
  23. குலாவுடையான்
  24. குணமாலுடையான்
  25. குல்லத்திரையான்
  26. கூடலுடையான்
  27. கொழுமுடையான்
  28. கோவுடையான்
  29. கொற்றத்துடையான்
  30. கொங்கராயன்
  31. சாத்தனுடையான்
  32. சாத்துக்குடையான்
  33. சீனத்திரையன்
  34. சீனத்தராயன்
  35. சேனாதிராயன்
  36. செம்புதிரையான்
  37. சேவித்திரையன்
  38. சேவுடையான்
  39. தனவாருடையான்
  40. தாக்குடையான்
  41. திட்டத்திரையன்
  42. தீவனுடையான்
  43. தீபத்திரையன்
  44. துளாருடையான்
  45. தென்னவராயன்
  46. தென்னப்பிரியன்
  47. தென்னத்திரையன்
  48. தொழுவுடையான்
  49. நங்குடையான்
  50. நன்னருடையான்
  51. நாக்குடையான்
  52. நெப்புக்குடையான்
  53. நெடுவாலுடையான்
  54. பரிவுடையான்
  55. பளுவுடையான்
  56. பனையுடையான்
  57. பஞ்சத்திரையன்
  58. பல்லவராயன்
  59. பாலுடையான்
  60. பாக்கமுடையான்
  61. பாண்டித்திரையன்
  62. மல்லுடையான்
  63. பூதரமுடையான்
  64. பூவனுடையான்
  65. பெண்ணுமுடையான்
  66. மங்கலமுடையான்
  67. மணக்குடையான்
  68. மருங்குடையான்
  69. மழுவுடையான்
  70. மாயனுடையான்
  71. மாலுடையான்
  72. மளுவத்திரையன்
  73. மீனவராயன்
  74. முனையதிரையன்
  75. இயத்தனுடையான்
  76. உத்தரக்குடையான்
  77. உலகுடையான்
  78. இறையுடையான்
  79. எருமையுடையான்
  80. எருக்குடையான்
  81. வயலுடையான்
  82. வழுத்தாவுடையான்
  83. வங்காருடையான்
  84. வல்லவராயன்
  85. வசந்தராயன்
  86. வானாதிராயன்
  87. வில்லவராயன்
  88. விசையராயன்
  89. விழுதுடையான்
  90. விச்சுடையான்
  91. விருப்பத்திரையான்
  92. வில்லதிரையான்
  93. வேளாருடையான்
  94. வெண்சாருடையான்
  95. திட்டதுடையான்
  96. இலூயனுடையான்

இதில், பெரும்பாலான கோத்திரங்கள் உடையார் என்று இறுதிச்சொல் உள்ளது

உடையார் - Chief or Lord

 "உடைமை"

அன்பு + உடையார் = அன்புடையார்

இதே போல், ஒரு பகுதியை குறிக்கும் போது, 

அந்த பகுதியை உடையவர் என்று பொருள் படுகின்றது

நிலப் பகுதியின் உடைமை பற்றி கூறப்படுகின்றது

1) அன்னல் + உடையான்

சோழர் காலத்தில்,

கேரளாந்தக வளநாட்டில் உள்ள கூற்றங்களில் ஒன்று - அன்னல் வாயில் கூற்றம்

எனவே, இந்த அன்னல் கூற்றத்தை உடையவர்கள் இக்கோத்திரத்தினர் என்று பொருள்படும்


13) கடம்ப + உடையான்

கடம்பர்கள் கர்நாடகவில் ஆட்சி புரிந்த வேளாள சிற்றரசர்கள் ஆவர்

கடம்பர் மற்றும் சாளுக்கியர் என இரு அரச குலங்களும் தங்களை "மானவ/மானவ்ய" கோத்திரம் என்று குறித்துள்ளனர்

Manava or Manavya Gothrams

கி.பி 11ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "கார் மண்டல சதகம்" என்கிற நூலில் 

கார் மண்டலத்தில் வாழ்ந்த வேளாளர்கள் - மானவ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறித்துள்ளனர்

Manava Gothram

மேலும், கார் மண்டலத்தை ஆட்சி செய்த 18 வேளாளர் அரச குடும்பங்களில் ஒன்றாக "கடம்பர்" அரச குடும்பமும் கூறப்பட்டுள்ளது

கார் மண்டலம் (இன்றைய கர்நாடகா மாநிலம்), இதை காராளர் மண்டலம் என்று நூலில் 
பாடப்பட்டுள்ளது



16) கார் + உடையான்

கார் நாடு உடைமை

கார் நாட்டை ஆட்சி செய்தவர்கள் (அரசர் ஆட்சிக்கு உட்பட்டு உடையாராக இருந்தவர்கள்)

இந்த கார் நாடு, சோழர் காலத்தில் இருந்த

இராசேந்திர சிம்ம வளநாட்டில்

இருந்த

சிதம்பரம் பகுதியைக் குறிக்கலாம்

அல்லது, 

மொத்த கார் மண்டலத்தையும் குறிக்கின்றதா என்பது தெரியவில்லை

26) கூடல் + உடையான்

இதில், கூடல் என்பது "இராஷ்டிரக் கூட" நாட்டைக் குறிக்கும்

ராஷ்டிரம் - மண்டலம் (அ) நாடு

ராஷ்டிரக்கூடர் - பல மண்டலங்களை ஒருங்கிணைத்து ஆட்சி செய்த வேளாளர்கள் 

கி.பி 11ம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள

"கார் மண்டல சதகம்" என்னும் நூலில் 

கார் நாட்டை (தற்போதைய கர்நாடகா மாநிலம்) ஆட்சி செய்த 18 வெள்ளாள அரச குடும்பங்களில் ஒன்றாக 

கூடர் குறிக்கப்பட்டுள்ளனர்

கூடர் - இராஷ்டிரக்கூடர்


மேலும், இராஷ்டிரக்கூடர்கள் யாதவ விருஷ்ணி குலத்தில் தோன்றியதாக தங்கள் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்


விருஷ்னி என்பது கிருஷ்ணனின் (இருங்கோவேள்) குலம்/கூட்டமாகும்

கிருஷ்ணனின் விருஷ்னி குல மக்களை அபிஹிரா (Abhiras) குல யாதவர்கள் இறுதியில் கொன்று அழிப்பர்

இருள் + கோ, அதாவது இருள் நிறத்து அரசன் 

சமஸ்கிருதத்தில், கிருஷ்ணன் எப்னபதற்கும் இதே அர்த்தம் தான், அதாவது "இருள்" (அ) "இருள் நிறத்து அரசன்"

கபிலர் தனது பாடலில் "இருங்கோவேள்" மன்னனை - துவரையை ஆண்டு 49 தலைமுறை வழிவந்த வேளிருள் வேளே என்று பாடியுள்ளார்

துவரை (Dwaraka) 

இருங்கோவேள் - கோட்டை/நற்குடி வேளாளர்

மற்றுமொரு முக்கிய ஆதாரம் :


இராஷ்டிரக்கூடர்கள் நிர்வாகத்தில் 

மாவட்டங்களுக்கு கீழ் உள்ள நிலப் பகுதியை 

நிர்வாகம்/ஆட்சி செய்பவர்கள்

நாட்டுக் கவுண்டர்கள் ஆவர்

இராஷ்டிரக்கூடர்கள் கிராமங்களை நிர்வாகம் செய்பவர்கள் 

கவுண்டர் பிரபுக்கள்

இதில், "கவுண்டர்" என்பது தமிழ் சாதிகள் பயன்படுத்தும் பட்டம், குறிப்பாக வேளாளர்கள்

நாட்டுக் கவுண்டர் என்பது இன்றும் கொங்கு பகுதியில் வாழும் நாட்டு வேளாள கவுண்டர்களைக் குறிக்கும்

27) கொழும + உடையான்

கொழுமம் என்னும் பகுதியை உடையவர்

புறநானூறு பாடலில் குமணன் என்னும் சங்ககால மன்னன் வாழ்ந்த பகுதியாக கூறப்பட்டுள்ளது

குமணன் ஆட்சி செய்த பகுதி - முதிரம் நாடு
(இன்றைய முதுமலை பகுதி) 

எனவே, சங்ககால மன்னனாகிய குமணன் வெள்ளாள சாதியைச் சேர்ந்தவன் என்பதும் 

இந்த வேளாள கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்பதும் அறிய முடிகின்றது

44) துளார் + உடையான்

துளார் - இன்று, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஆகும்

இப்பகுதியை உடையவர்களாக இக்கோத்திரத்தார் இருந்துள்ளனர்


துளாருடையார் கோத்திர சோழர் கால கல்வெட்டு


எனவே, இக்கோத்திரத்து வேளாளர்கள் சோழர் காலத்தில் துளார் பகுதியை உடையவர்களாக இருந்துள்ளனர் என்பது அறிய முடிகின்றது

60) பாக்கம் + உடையான்

பாக்கம் :

பாக்கம் என்னும் இச்சொல், எதைக் குறிக்கின்றது என்பது சரியாக தெரியவில்லை

பாக்கமுடையார் கோத்திரத்து சோழர் கால கல்வெட்டு 


63) பூதரம் + உடையான்

பூதரம் என்றால் மேரு மலை என்று கி.பி 9ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திவாகர நிகண்டு கூறுகின்றது 

பூதரம் என்றால் இமயமலை (The Himalayas) என்று கி.பி 10ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிங்கல நிகண்டு கூறுகின்றது

பூதரமுடையான் என்றால்

இமயமலைகளை உடையவன்

இமயமலைப் பகுதிகளை ஆட்சி செய்தவன்

இமயமலை அரசன் என்று பொருள்படுகின்றது

மேலும் ஒரு முக்கிய ஆதாரம் 

இது, Spain நாட்டைச் சேர்ந்த Henry Heras என்பவர் 1938ல் சிந்து ஹரப்பா நாகரீக கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து எழுதிய

The Vellalas in Mohenjo-Daro

Indus Valley Civilization Deciphered Article

இதில், சிந்து சமவெளி நாகரீக கல்வெட்டுகளில் தெளிவாக

இமயமலை வெள்ளாளர்களுக்கு உடையது என்று எழுதியுள்ளார்

இதிலிருந்து, இக்கோத்திரங்கள் எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை அறிய முடிகின்றது

மேலும், Henry Heras வேளாளர்கள் வாழ்ந்தது இன்றைய Uttar Pradesh, Uttarkand, Punjab மாநிலங்கள் என எழுதியுள்ளார் (சிந்து ஹரப்பா நாகரீக காலத்தில்


69) மழு + உடையான்

மழு - சிவபெருமானின் ஆயுதங்களில் ஒன்று

கோடாரி போன்ற ஆயுதம்

எனவே, இக்கோத்திரத்தினர் இந்த மழு என்ற ஆயுதத்தை உடையவராக இருந்துள்ளனர்

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. சோழிய வெள்ளாளர், பாண்டிய வெள்ளாளர் போன்ற பிற வெள்ளாளர்கள் பற்றியும் பதிவு போடவும்

    ReplyDelete

Post a Comment